Publish Date: Tue, 28 Jan 2020 (07:50 IST)
Updated Date: Tue, 28 Jan 2020 (07:51 IST)
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வயிற்று வலி என சிகிச்சைக்கு வந்த சிறுமியின் வயிற்றில் முடி மற்றும் காலி ஷாம்பூ பாக்கெட்கள் என வித்தியாசமானப் பொருட்கள் இருந்துள்ளன.
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் மாத்திரைக் கொடுத்தும் வலி தீரவில்லை. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது முடி மற்றும் காலி ஷாம்பூ பாக்கெட்கள் இருந்துள்ளன. அதை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். இதையடுத்து சிறுமியிடம் நடத்திய விசாரணையில் சமீபத்தில் அவரது தாய்மாமன் இறந்து விட்டதாகவும் அந்த விரக்தியில் இது போல செய்ததாகவும் சொல்லியுள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பின் சிறுமி வலி இல்லாமல் நலமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.