Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான்கு மாத தவணை பாக்கிக்காக வீட்டின் கதவை பூட்டிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள்!

நான்கு மாத தவணை பாக்கிக்காக வீட்டின் கதவை பூட்டிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள்!

J.Durai

கடலூர் , சனி, 1 ஜூன் 2024 (14:56 IST)
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே ஸ்ரீஆதிவராகநல்லூர் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர்கள் ரேணுகா-சிலம்பரசன்  தம்பதியினர் .
இவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிதம்பரத்தில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் 5 லட்ச ரூபாய் கடன் பெற்றிருந்தனர்.
 
தொடர்ந்து கடன் தவணைகளை சரியாக கட்டி வந்த சிலம்பரசன் குடும்பத்தினர் கடந்த நான்கு மாதமாக கடுமையான  பொருளாதார பாதிப்பு ஏற்பட்டு தனியார் நிதி நிறுவனத்தின் கடன் தவணையை கட்ட முடியாமல் போனது. இந்நிலையில் இரவு நேரத்தில் திடீரென வீட்டுக்குள் வந்த தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் தவணை நிலுவைத் தொகை ஏன் கட்டவில்லை என கேட்டு கடுமையான வார்த்தைகளாலும், மனம் புண்படியான பேச்சுகளாலும் வீட்டில் கைக்குழந்தையோடு இருந்த ரேணுகாவிடம் பேசினர். 
 
அப்போது  ரேணுகா எனது கணவர் வந்தவுடன் கூறி கடன் தொகையை விரைவில் கட்டுவதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று தெரிவித்த போதும், அதனை கேட்காத தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் ஆபாசமாகவும், மிரட்டல் விடுத்தும் பேசிக்கொண்டே வீட்டுக்குள் கைக்குழந்தையோடு கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்த ரேணுகாவை தரதரவென்று வெளியே இழுத்து வந்து  வீட்டுக்கு முன்பாக நிற்க வைத்தனர் . பின்னர் அவர்கள் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தை பூட்ட பயன்படும் பூட்டை எடுத்து வீட்டின் கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர் அப்போது ரேணுகா மாவு அரைத்துக் கொண்டு இருந்ததால் கிரைண்டர் நீண்ட நேரம் ஓடி அதுவாகவே ரிப்பேர் ஆகி நின்றது.
 
கிரைண்டர் ரிப்பேர் ஆனதால் வீட்டில் உள்ள மின் இணைப்பு அனைத்தும் பழுதானது. 
 
இதனால் வீடே இருள் சூழ்ந்தது. ரேணுகா தனியாக தெருவில் நிற்பதை கண்ட கிராமத்தினர் உடனடியாக அவரது கணவர் சிலம்பரசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் அங்கு வந்தார். அப்போது
அவரிடம் தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் பணம் கேட்டு மீண்டும் செல்போனில் பேசத் தொடங்கினர்.
 
அப்போது சிலம்பரசன் என் வீட்டை ஏன் பூட்டினீர்கள் என்று கேட்டதற்கு அது அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். முதலில் பணம் கட்டுவது என்ன ஆயிற்று என்று பேசுவதிலேயே தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் போனில் பேசிக் கொண்டிருந்தனர். 
 
ஆனாலும் சிலம்பரசன் எப்படி இரவு நேரத்தில் வந்து நீங்கள் வீட்டை பூட்டிவிட்டு கடனை வசூலிக்க வேண்டும் என்று கேட்டபோது தெனாவட்டாக பதிலளித்த தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் சவால் விட்டுள்ளனர். 
 
இது குறித்து ரேணுகா- சிலம்பரசன் தம்பதியினர் ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஸ்ரீமுஷ்ணம் காவல்ஆய்வாளர் ராபின்சன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 
தனியார் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகள் கட்டுப்பாடற்ற முறையிளும் கடன் வாங்கியவர்களிடம் அநாகரிகமாகவும் கந்துவட்டி கும்பல் போலவும் செயல்பட்டு வருவது வேதனை அளித்து வருகிறது. அது இந்த  தொடரும் அவலமாகவும் இருக்கிறது என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் மின் தேவை புதிய உச்சம்.! மின்தடைக்கு காரணம் என்ன.? மின்வாரியம் விளக்கம்.!