Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இமானுவேல் சேகரனின் 67-வது குரு பூஜை மரியாதை செலுத்த அரசு பேருந்து வழங்காததை கண்டித்து சாலை மறியல்.......

Advertiesment
இமானுவேல் சேகரனின் 67-வது குரு பூஜை மரியாதை செலுத்த அரசு பேருந்து வழங்காததை கண்டித்து  சாலை மறியல்.......

J.Durai

, புதன், 11 செப்டம்பர் 2024 (12:14 IST)
இமானுவேல்சேகரன் 67வது குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை சென்று இமானுவேல் சேகரன் திருவருட்சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக அரசு பேருந்துக்கு பணம் கட்டியும் மதுரை பொன்மேனி அரசு போக்குவரத்து கழக பணிமனை சேர்ந்த போக்குவரத்து கழக அதிகாரிகள் பேருந்த்துகள் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால் சின்னஉடைப்பை சேர்ந்த 80 -க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட போவதாக காவல் துறையினருக்கு வந்த தகவல்யடுத்து சின்ன உடைப்பு கிராமத்தில் மதுரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அன்ஷுல் நாகர் தலைமையில் சின்னஉடைப்பு கிராம மக்கள் சாலை மறியல் ஈடுபட உள்ள இமானுவேல்சேகரன் சிலை அருகே 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கபட்டு உள்ளனர். 
 
காவல்துறையினர் பொன்மேனி போக்குவரத்து பணிமனை போக்குவரத்து அதிகாரிகளிடம் பேருந்து கொடுப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர், கிராம மக்கள் தங்களுக்கு பேருந்து வழங்கினால் இந்த இடத்தை விட்டு செல்வோம் அல்லது பரமக்குடி வரை நடந்து செல்ல அனுமதி கொடுங்கள்  என்று கூறி வருவதால் மதுரை விமான நிலையம் செல்லும் முக்கிய சாலை மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லியில் நள்ளிரவில் டாக்சியில் பயணிக்க வேண்டாம்: சிங்கப்பூர் பெண் நெட்டிசன்..!