Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இமானுவேல் சேகரின் 61வது நினைவு தினம்

Advertiesment
இமானுவேல் சேகரின் 61வது நினைவு தினம்
, செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (12:54 IST)
இமானுவேல் சேகரின் 61வது நினைவுதினம் ராமனாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள சந்தைப் பேட்டை பகுதியில் இன்று  நடக்கவுள்ளது.

இமானுவேல் சேகரின் நினைவுதினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள், அமைப்பாளர்கள் போன்றோர் கலந்து கொள்ள உள்ளனர். அதன் பொருட்டு அங்கு பாதுகாப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டு சுமார் 5000 ம் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் இருக்க மோப்ப நாய்களும், வெடிகுண்டு நிபுணத்துவமுள்ள போலீசாரும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் பரமக்குடி பகுதியைச் சுற்றிலும் 75 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு நேற்றைய ஒத்திகையின் போது ட்ரோன் வகை கண்காணிப்பு கேமராக்களும் பறக்கவிடப்பட்டன.அப்போது தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். ஆங்காங்கே பல பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பும்பலப்படுத்தப்பட்டுள்ளது .

இந்த அஞ்சலி நிகழ்ச்சி தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம் சார்பில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உல்லாசமாக இருந்த மனைவி - தலையை வெட்டி தூக்கிச்சென்ற கணவன்