நீலகிரி மாவட்டம் குன்னூரில் தன் வீட்டு மாடியில் விளையாண்டு கொண்டிருந்த சிறுவன் மின்சார கம்பி உரசி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் அருகே உள்ள ஓதனட்டி கிராமத்தில் வசிப்பவர் சசிகுமார். இவருக்கு வைதேகி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு பிரவீன்(14) நவீன் இரு மகன்கள் உள்ளனர்.
தற்போது தேர்வுக்காக ஸ்டடி லீவு விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வீட்டு மாடியில் விளையாடிக்கொண்டிருந்தான் பிரவீன்.
அங்கு மின்கம்பியானது சிறுவனின் தலைக்கு மேல் இருந்துள்ளது. அப்போது பிரவீன் மின்கம்பி மீது உரசினான். இதில் பிரவீன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
பின்னர் இதுபற்றி பொதுமக்கள் மின்சார வாரியத்துக்கும், போலீஸாருக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து விரைந்து வந்த மின்சாரவாரியத்துறையினர் மின் இணைப்பை துண்டித்தனர்.
பிறகு மாணவன் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மின்கம்பி தாக்கு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.