Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்க பைக்கையா பிடிக்கிறீங்க? – காவல் நிலையத்துக்கே கரண்ட் கட் போட்ட மின்வாரியம்!

Webdunia
ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (10:52 IST)
ஸ்ரீ வில்லிப்புத்தூரில் மின் வாரிய ஊழியர்களின் பைக்கை பறிமுதல் செய்த காவல் நிலையத்திற்கு மின்சாரத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் கூமாப்பட்டி காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் அந்த வழியாக வந்த மின்வாரிய ஊழியர் சைமன் என்பவரது பைக்கை பரிசோதனை செய்துள்ளார். உரிய ஆவணங்கள் இல்லாமல் பயணித்ததாகவும், ஒரே பைக்கில் மூவர் வந்ததாகவும் அவரது பைக்கை பறிமுதல் செய்தார் சப் இன்ஸ்பெக்டர்.

இதுகுறித்து மின்வாரிய ஊழியர் சைமன் உதவி பொறியாளர் கோபால் சாமியிடம் புகார் அளித்துள்ளார். காவலர்களின் இந்த செயலுக்கு பழி வாங்க எண்ணிய மின்வாரிய ஊழியர்கள் கூமாப்பட்டி காவல் நிலையத்திற்கு மின்சார இணைப்பை 2 மணி நேரம் துண்டித்து வைத்துள்ளனர். இதுகுறித்து கூமாப்பட்டி உதவி காவல் ஆய்வாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ள நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போலீஸார், மின்வாரியத்தினர் இடையே ஏற்பட்ட இந்த மோதம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொது ஊழியர்களை அவதூறாக பேசினால் ஆடைகள் களையப்படுவார்கள்: தெலுங்கானா முதல்வர்..!

மத்திய அரசு வழங்கிய நிதியை ஏப்பம் விட்டுவிட்டு,பேச வெட்கமாக இல்லையா? அண்ணாமலை

முன்னாள் முதல்வர் மகனுக்குக் ரூ.4000 அபராதம்: போக்குவரத்து காவல்துறை அதிரடி..!

சுனிதா வில்லியம்ஸை சந்தித்த பூமியில் இருந்து சென்ற விஞ்ஞானிகள்: நாசா வெளியிட்ட புகைப்படம்..!

1000 கி.மீ. க்கு அப்பால் தேர்வு மையம் வைப்பதா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments