Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கள்ளக் காதலிக்கு மேலும் ஒரு கள்ளக் காதலன்: கட்டிப்போட்டி சித்திரவதை!

கள்ளக் காதலிக்கு மேலும் ஒரு கள்ளக் காதலன்: கட்டிப்போட்டி சித்திரவதை!

Advertiesment
கள்ளக் காதலிக்கு மேலும் ஒரு கள்ளக் காதலன்: கட்டிப்போட்டி சித்திரவதை!
, வியாழன், 11 மே 2017 (17:33 IST)
திருவண்ணாமலையில் கணவனை விட்டுவிட்டு கள்ளக் காதலனுடன் வசித்து வந்த பெண் அடுத்ததாக வேறொரு ஆணுடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டதால் கள்ளக் காதலனால் கட்டிபோட்டு சித்தரவதை செய்யப்பட்டுள்ளார்.


 
 
திருவண்ணாமலை உத்திரமல்லூரில் முருகேசன், கிருஷ்ணவேணி தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்களது வீட்டிற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜேந்திரன் என்பவர் எலக்ட்ரீஷியன் வேலைக்கு சென்றுள்ளார். வேலைக்கு சென்ற இடத்தில் ராஜேந்திரனுக்கு முருகேசனின் மனைவி கிருஷ்ணவேணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
 
இந்த பழக்கம் கள்ளக் காதலாக மாற இருவரும் ஓடிப்போய் ஒரே வீட்டில் வசிக்க ஆரம்பித்தனர். இதனால் ராஜேந்திரனின் மனைவி தனது மகனுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் ராஜேந்திரனுடன் ஓடி வந்து ஒரே வீட்டில் வசிக்கும் கிருஷ்ணவேணிக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
 
இந்த விவகாரம் கள்ளக்காதலன் ராஜேந்திரனுக்கும் தெரியவர அவர் கிருஷ்ணவேணியிடம் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து  அவர் கிருஷ்ணவேணியை அடித்து கட்டிப்போட்டு வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
 
கிருஷ்ணவேணியின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து கிருஷ்ணவேணியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தப்பியோடிய கள்ளக் காதலன் ராஜேந்திரனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அணு உலை சுரங்க பாதை விபத்து: அமெரிக்காவில் அபாயம்!!