Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர்தலில் வெற்றி பெற்ற தந்தை – கொண்டாடிய மகன் மாரடைப்பால் மரணம் !

தேர்தலில் வெற்றி பெற்ற தந்தை – கொண்டாடிய மகன் மாரடைப்பால் மரணம் !
, வெள்ளி, 3 ஜனவரி 2020 (08:01 IST)
தனது தந்தையின் வெற்றியை மேளதாளத்தோடு கொண்டாடிய மகன் மாரடைப்பு வந்த மரணித்த சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று காலை முதல் உள்ளாட்சித் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்டம், பொள்ளிகாளிபாளையம் கிராமப் பஞ்சாயத்து 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டார் சுப்பிரமணியம் என்ற வேட்பாளர்.

அறிவிக்கப்பட்ட முடிவில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,  வெற்றியை , அவரது மகன் கார்த்தி மத்தளம் அடித்து சந்தோஷமாகக் கொண்டாடினார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவர் மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த சம்பவம் அவரின் குடும்பத்துக்கும் ஊருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரண்டாவது நாள் வாக்கு எண்ணிக்கை: திமுக தொடர்ந்து முன்னிலை!