Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவர்னர் நியமனத்தில் தேர்தல் முறை வேண்டும் - கமல் ஹாசன்

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2022 (14:01 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் கவர்னர் நியமனத்தில் தேர்தல் முறை அவசியம் என கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 2018 ஆம் ஆண்டு தன் கட்சியை ஆரம்பித்தார். அவர் எதிர்பார்த்த கட்சி ஆரம்பத்தில் வளர்ந்து வந்த  நிலையில், கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அடைந்த தோல்வி காரணமாக அவர் கட்சியை விட்டு முக்கிய நிர்வாகிகள் வெளியேறினர்.

அதன்பின், பிக்பாஸ் மற்றும் சினிமாவில் தீவிரமாக இயங்கி வருகிறார். இவர் நடிப்பில் விக்ரம் வெளியான நிலையில், விரைவில் இந்தியன் 2 வெளியாகவுள்ளது.  அவ்வப்போது,  அரசியல் குறித்து கருத்துக் கூறி வரும் கமல் ஹாசன்  கவர்னர் நியமனத்தில் தேர்தல் முறை அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:  பல்கலைகளில் துணை வேந்தரை நியமிப்பது மாநில அரசின் உரிமை என்று முதல்வர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டதிருத்தத்திற்கு கவர்னர்  ஒப்புதல் அளிக்க மறுத்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருக்கிறார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதி நிதிகள் கொண்ட  சட்டசபைக்கு மதிப்பு அளித்து, விரைவில் சட்ட திருத்தத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும்  என்வும் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது போன்று கவர்னர் தேர்விலும் தேர்தல் முறை பின்பற்ற    வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments