ஓட்டு போடாமலே பிரபல நடிகர் விரலில் மை வைக்கப்பட்டதா? பெரும் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (13:54 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றபோது பிரபல தமிழ் நடிகர் ஒருவருக்கு ஓட்டு போடாமலேயே அவரது விரலில் மை வைக்கப்பட்ட விவகாரம் தற்போது தெரிய வந்துள்ளது
 
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் தேர்தல் அதிகாரிகள் ஓட்டு போட அனுமதிக்கவில்லை. ஆனால் இதே நிலைமை சிவகார்த்திகேயனுக்கும் இருந்த நிலையில் அவரை மட்டும் ஓட்டு போட அனுமதித்தது ஏன்? என்று ஸ்ரீகாந்த் வாக்குவாதம் செய்ய வேறு வழியின்றி தேர்தல் அதிகாரிகள் ஸ்ரீகாந்தையும் அவரது மனைவியையும் ஓட்டு போட அனுமதித்ததாக கூறப்படுகிறது
 
ஆனால் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, நடிகர் ஸ்ரீகாந்தை ஓட்டு போட தேர்தல் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்றும், அவரது விரலில் மை மட்டுமே வைக்கப்பட்டது என்றும் கூறினார். 
 
ஓட்டே போடாமல் விரலில் மை மட்டும் வைத்தது ஏன்? என்ற கேள்வி எழுவதோடு, ஓட்டளித்த பின்னர் ஸ்ரீகாந்த் தான் வாக்களித்ததாக கொடுத்த பேட்டியும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. நடிகர் ஸ்ரீகாந்த் இதுகுறித்து விளக்கமளித்தால் மட்டுமே இந்த குழப்பம் தீரும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments