Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் அதிகாரி அண்ணாமலை நண்பரா?

Sinoj
புதன், 27 மார்ச் 2024 (19:03 IST)
தமிழகத்தில் மக்களவை தேர்தல் தேதி ( ஏப்ரல் 19 )அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்துக் கட்சிகளும், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில்,  தமிழ் நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளனர்.
 
 பல கட்டங்களாக பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகி வருகிறது.
 
சமீபத்தில் பாஜக வெளியிட்ட தமிக்ழக வேட்பாளர் பட்டியலில்  மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யாத பல கட்சி வேட்பாளர்களும்,  நட்சத்திர வேட்பாளர்களும் இறுதி நாளான இன்று வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
 
 இந்த நிலையில்  நாடாளுமன்ற தேர்தலில் கோவை மற்றும் நீலகிரி தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர் அண்ணாமலையில் நண்பர்? என்ற தகவல் வெளியாகிறது.
 
பாஜக தலைவர் அண்ணாமலையில் நெருங்கிய நண்பரான காவல்துறை அதிகாரி, மனோஜ்குமாரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளதாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியானது.
 
இது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கோவையில் அண்ணாமலையும், நீலகிரி தொகுதியில் இணையமைச்சர் எல்.முருகனும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments