Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜ்யசபா எம்பிக்களின் தேர்தல் - வேட்புமனு தாக்கல் துவக்கம்!

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (08:42 IST)
6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட இன்று முதல் மே 31 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம். 

 
ராஜ்யசபா எம்பிக்களின் தேர்தல்: 
தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்பிக்களின் பதவி காலியாக இருக்கும் நிலையில் இந்த பதவிகளுக்கு ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணிக்கு 4 எம்பிக்களும், அதிமுக கூட்டணி 2 எம்பிக்களும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
திமுக கூட்டணியில் கிடைக்கும் 4 எம்பிக்களில் 3 எம்பிக்கள் திமுகவும், ஒரு எம்பி காங்கிரஸ் கட்சியும் பகிர்ந்து கொள்கின்றன. அதிமுகவுக்கு கிடைக்கும் 2 எம்பிக்களில் கூட்டணி கட்சிகளுக்கு எதுவும் இல்லை. இருப்பினும் பாமக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் அதிமுகவுக்கு  ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன. 
 
இன்று முதல் வேட்புமனு தாக்கல்: 
இந்நிலையில் தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட இன்று முதல் மே 31 ஆம் தேதி வரை தலைமைச் செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி இடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். மாநிலங்களவை தேர்தல் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்குகள் அடிப்படையில் நடைபெறும். ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் 34 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் இருந்து தப்பிய கற்பழிப்பு குற்றவாளி.. ஒளிய நினைத்து கிணற்றில் விழுந்த பரிதாபம்..!

கர்ப்பிணி மனைவியை கொன்று 2 நாட்கள் பிணத்துடன் வாழ்ந்த வாலிபர்.. அதிர்ச்சி சம்பவம்..!

மாநிலங்களவை எம்பி ஆனார் கமல்ஹாசன்.. தமிழில் பதவியேற்பு..!

பெங்களூரு - தாம்பரம் இடையே ஏசி பஸ்.. தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சேவை..!

கரடியின் பிடியில் இந்திய பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments