10, 12 வகுப்புகள் பொதுத்தேர்வால் நாடாளுமன்ற தேர்தல் தேதி மாறுகிறதா?

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2023 (14:18 IST)
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொது தேர்வு காரணமாக தேர்தல் தேதி மாற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் தேதி குறித்து தேர்தல் ஆணையம் தற்போது ஆலோசனை செய்து வருகிறது. மார்ச், ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்களில் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொது தேர்வு மற்றும் பிற வகுப்புகளுக்கு தேர்வு நடைபெற இருப்பதால் தேர்தல் தேதியை மார்ச் ஏப்ரலுக்கு பின் வைக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. 
 
வாக்குப்பதிவு பெரும்பாலும் பள்ளிகள் தான் நடப்பதால் தேர்வுகளுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக தேர்வு தொடங்கும் முன்பே வாக்கு பதிவை நடத்தி விடலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.  
 
தேர்தல் தேதி குறித்து தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாகவும் இன்னும் ஒரு சில வாரங்களில் தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments