Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்: தேதி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 28 அக்டோபர் 2022 (11:42 IST)
வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கவும் மாற்றங்கள் செய்யவும் சிறப்பு முகாம்கள் அமைக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதோடு சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கும் தேதியையும் அறிவித்துள்ளது
 
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாம் நவம்பர் 12, 13 மற்றும் நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
மேற்கண்ட தேதிகளில் காலை 9.30 மணி - மாலை 5.30 மணி வரை அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில்  நடைபெறுகிறது என்றும், இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
வரும் 2024 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு முன் வாக்காளர் பெயர் பட்டியலில் புதிதாக சேர்க்க உள்ளவர்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி சேர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments