Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்: முதல்வர் கனவுக்கு புதிய சிக்கல்!

சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்: முதல்வர் கனவுக்கு புதிய சிக்கல்!

Advertiesment
சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்: முதல்வர் கனவுக்கு புதிய சிக்கல்!
, சனி, 4 பிப்ரவரி 2017 (15:46 IST)
தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலாளருமாக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து அவரது தோழி சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக உள்ளார். இந்நிலையில் அவர் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


 
 
ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக அவரது தோழி சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இவர் நிரந்தர பொதுச்செயலாளர் அல்ல தற்காலிகமாக தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் சில சிக்கல்கள் அவருக்கு வரும் என முன்னரே கூறப்பட்டது.
 
அதிமுக கட்சி விதிப்படி அந்த கட்சியில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்தவர் தான் பொதுச்செயலாளர் ஆக முடியும் என்ற சட்டம் உள்ளது. ஆனால் கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட சசிகலா மீண்டும் கட்சியில் இணைந்து 5 ஆண்டுகள் நிறைவடையவில்லை.
 
இதனால் அவர் பொதுச்செயலாளர் ஆவதில் சட்ட சிக்கல் இருந்தது. இதனை வைத்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்திருந்தார்.
 
பொதுக்குழு கூடி தேர்தல் நடத்தி உறுப்பினர்கள் வாக்களித்து தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். அப்படி தேர்ந்தெடுத்தால் தான் அவர் நிரந்தர பொதுச்செயலாளர். அவருக்கு தான் கட்சியில் சர்வ அதிகாரமும் உண்டு.
 
ஆனால் அப்படி சசிகலாவை தேர்ந்தெடுப்பதில் சட்டசிக்கல் இருப்பதால் அதிமுக முன்னணி தலைவர்கள் பொதுக்குழுவை கூட்டி தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலாவை அறிவித்தார்கள்.
 
ஆனால் தற்காலிக ஏற்பட்டாக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா தேர்தல் ஆணையத்திடம் தாம் பொது செயலராகிவிட்டதாக கடிதம் கொடுத்திருந்தார். இந்த கடிதத்தை நிராகரிக்க வேண்டும் என சசிகலா புஷ்பா தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்தார்.
 
அவரது மனுவில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஓட்டுப் போட்டு சசிகலாவை பொதுச்செயலராக தேர்வு செய்யவில்லை. எனவே அந்த நியமனத்தை தேர்தல் ஆணையம் ஏற்க கூடாது. தேர்தல் ஆணையமே தேர்தலை நடத்தி அதிமுக பொது செயலாளரை தேர்ந்தெடுக்க உதவ வேண்டும் என கூறியிருந்தார்.
 
இதனையடுத்து தற்போது இப்புகாரின் அடிப்படையில் சசிகலாவிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் திங்கள் கிழமை தமிழக முதல்வராக பதவியேற்க வியூகங்களை வகுத்து வரும் சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸ் புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் அன்பாவன் இல்லை; அடங்காதவன்; அசராதவன்: ட்ரம்ப் எச்சரிக்கை