Webdunia - Bharat's app for daily news and videos

Install App

234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமனம்: களை கட்டுகிறது தேர்தல்

Webdunia
செவ்வாய், 26 ஜனவரி 2021 (07:27 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தேர்தல் குறித்த அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் தமிழக தேர்தல் ஆணையம் ஏற்கனவே தேர்தலை நடத்த தயாராகியுள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
மேலும் தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமனம் செய்தது குறித்த தேர்தல் அதிகாரிகளின் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார் என்பதும் இந்த பட்டியல் அரசு இதழிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த பட்டியல் தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது என்பதும் அவற்றை விரும்புபவர்கள் அந்த இணையதளத்திற்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடதக்கது இதனை அடுத்து தமிழகத்தில் தேர்தல் களை கட்டி விட்டது என்பதும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி விட்டது என்பதும் தெரிந்ததே
 
இன்னும் ஒருசில வாரங்களில் தேர்தல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தலைமை தேர்தல் ஆணையத்திடம் இருந்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments