Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகாசி பட்டாசு ஆலை தீ விபத்து : 8 பேர் பலி

சிவகாசி பட்டாசு ஆலை தீ விபத்து : 8 பேர் பலி

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2016 (15:29 IST)
சிவகாசி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியாகி விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.


 

 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி புறவழிச் சாலையில் உள்ள ஒரு பட்டாசு கிடங்கில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஏராளமான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு, வெளியூர்களுக்கு அனுப்பி வைப்பதற்காக அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த பெட்டிகளை ஆட்டோ ஒன்றில் ஏற்றிக் கொண்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 
 
தீ வேகமாக பரவியதால் அந்த கிடங்கு முழுவதும் தீ பற்றிக் கொண்டது. அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான இரு சக்கர வாகனங்கள் தீக்கு இரையாகின.  30 பேருக்கும் மேல் படுகாயம் அடைந்துள்ளனர். 
 
அந்த கிடங்கின் அருகிலிருந்து ஒரு மருத்துவ பரிசோதனை ஸ்கேன் நிலையத்திலும் தீ பற்றிக் கொண்டது. இதனால், ஸ்கேன் எடுப்பதற்காக அங்கு வந்திருந்த சில நோயாளிகளும் அங்கு சிக்கி தவித்து வருகின்றனர்.
 
இரண்டு தீயணைப்பு வாகனம் மூலம், சுமார் 20 தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 
 
இதற்கிடையில், ஸ்கேன் செண்டரில் இருந்து 8 பேர் மூச்சுத் திணறி பலி அடைந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில் 4 பேர் பெண்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Get Out ட்ரெண்டிங்.. 11 மணி நிலவரம்! காணாமல் போன அந்த ஹேஷ்டேக்!

ஆசியாவின் ஆழமான கிணற்றை தோண்டிய சீனா.. எத்தனை வருடம்.. எவ்வளவு ஆழம்?

பங்குச்சந்தையின் சரிவு தொடர்கிறது.. லட்சக்கணக்கில் பணத்தை இழந்த முதலீட்டாளர்கள்..!

G Pay, PhonePe பரிவர்த்தனைகளுக்கு 1% வரை கட்டணம்.. ஆனா..?

சற்றே குறைந்தது தங்கம் விலை.. ஆனாலும் ஒரு சவரன் ரூ.64000க்கும் மேல் தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments