எழும்பூர் ரயில் நிலையத்தில் கழிவறையில் பயன்படுத்தப்படும் தண்ணீரை கேண்டீன் பாய்லரில் ஊழியர் ஊற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 7வது பிளாட்பாரத்தில் உள்ள கேண்டீன் முகமது அக்பர் என்பவரால் உரிமம் எடுத்து நடத்தப்பட்டு வருகிறது. அதில் பணி செய்யும் ஊழியர் ஒருவர் ரயிலை சுத்தம் செய்வதற்காகவும், கழிவறைகளில் தண்ணீர் நிரப்புவதற்காகவும் தண்ணீர் கொண்டு செல்லும் குழாயிலிருந்து நீரை பிடித்து டீ போடும் பாய்லரில் ஊற்றியிருக்கிறார். இதை அங்கு அமர்ந்திருந்த சக பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ ட்ரெண்டான நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுத்த கோட்ட மேலாளர் கேண்டீனை மூட உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவால் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை உபயோகிக்கும் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.