Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாக்களிக்க மக்களோடு வரிசையில் நின்ற அதிமுக அமைச்சர்!

Advertiesment
வாக்களிக்க மக்களோடு வரிசையில் நின்ற அதிமுக அமைச்சர்!
, வெள்ளி, 27 டிசம்பர் 2019 (11:57 IST)
தமிழகமெங்கும் நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க அதிமுக அமைச்சர் வரிசையில் நின்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தங்கள் வாக்குகளை செலுத்த வாக்குச்சாவடிகளுக்கு ஆவலோடு வருகை புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையம் பஞ்சாயத்துக்கு நடைபெறும் வாக்குப்பதிவில் வாக்களிக்க கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்றுள்ளார். மக்களோடு மக்களாக நின்று, காத்திருந்து தனக்கான வாய்ப்பு வந்த போது சென்று வாக்களித்துள்ளார் அமைச்சர் செங்கோட்டையன். இதற்காக பலர் அவரை வாழ்த்தியுள்ளனர்.

கடந்த ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தலின்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இதேபோல மக்களுடன் வரிசையில் காத்திருந்து வாக்கு செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முஸ்லிம் பையன் வீட்டுக்கு நான் போகனும்? அமைச்சரின் கேவலமான பேச்சு!