Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு கூட செவிமடுக்க மறுக்கும் இந்த அரசு- எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (16:38 IST)
''இனியும் விவசாய சங்கங்கள் மீது இத்தகைய அடக்குமுறையை கையாண்டால் இந்த அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கிறேன்'' என்று  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை முன்னெத்தும், தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியும் இன்று சென்னை மெரினா சாலையில் தேசிய கொடியை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் திரு.பி.ஆர்.பாண்டியன் அவர்களின் மீது தாக்குதல் நடத்தியும் வலுக்கட்டாயப்படுத்தியும் கைது செய்திருக்கும் இந்த விடியா திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு கூட செவிமடுக்க மறுக்கும் இந்த அரசு இருந்தென்ன இல்லை என்றால் என்ன? தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் மக்களுக்காகவே அர்ப்பணித்து வரும் விவசாயிகள் மீது அடக்குமுறையை கையாள்வதை ஒருநாளும் ஏற்றுக் கொள்ள முடியாது என  இந்த அரசை மீண்டும் ஒரு முறை கண்டிப்பதுடன், இனியும் விவசாய சங்கங்கள் மீது இத்தகைய அடக்குமுறையை கையாண்டால் இந்த அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கிறேன்.’’என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments