திமுக வெற்றிக்கு மறைமுகமாக உதவும் எடப்பாடி பழனிசாமி என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் தலைமையில் திமுக, ஐஜத, திரிணாமுல் உள்ளிட்ட 26 கட்சிகள் ஒன்றிணைந்து பெங்களூரில் ஆலோசனை கூட்டம் நடத்தின.
இதற்கு எதிராக, தேசிய ஜன நாயகக் கூட்டணி சார்பில் பாஜக தலைமையில் டெல்லியில் கூட்டணிக் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில், அதிமுக, ஐஜேகே, தமாகா, பாமக உள்ளிட்ட 38 கட்சிகள் கலந்துகொண்டன.
இக்கூக்கூட்டணியில், அதிமுக சார்பில், அக்கட்சியின் பொதுச்செயளாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, பிரதமர் மோடியின் அருகில் அமர்ந்திருந்தார்.
இதுகுறித்து, அதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், திமுக வெற்றிக்கு மறைமுகமாக உதவும் எடப்பாடி பழனிசாமி!
வழக்குகளில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள மத்திய பாஜக-வுடன் கூட்டணி அதன் மூலம் திமுகவை வெற்றிபெற வைத்து அவர்களிடமும் சமரசம் தங்களை காப்பாற்றிக்கொள்வதிலே கண்ணும் கருத்துமாக செயல்படும் எடப்பாடி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் என்று தெரிவித்துள்ளார்.