தமிழக விவசாயிகளை ரவுடிகளோடு ஒப்புமைப்படுத்தி பேச வேண்டாம் என மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டங்களில் பேசும் மு.க.ஸ்டாலின் அடிக்கடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை விவசாயி என்று குறிப்பிடுவதை, திரைப்படத்தில் நடிகர் வடிவேலு நானும் ரௌடிதான் என கூறும் நகைச்சுவை காட்சியோடு ஒப்புமைப்படுத்தி பேசி வருகிறார்.
இதுகுறித்து கண்டனம் தெரிவித்து பேசியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி ”தமிழக விவசாயிகளை அரசு குழந்தைபோல பாதுகாத்து வருகிறது. நான் ஒரு விவசாயி என்று கூறுவதை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பல மேடைகளில் நானும் ரவுடிதான் என கூறிக்கொள்வதாக இகழ்வாக பேசி வருகிறார். உணவிடும் விவசாயிகளை ரௌடிகளோடு ஒப்புமைப்படுத்தி ஸ்டாலின் கீழ்தரமாக பேசி வருகிறார்” என கூறியுள்ளார்.