Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

10 லட்சம் பத்தாது, பிரியா குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் கொடுங்க: எடப்பாடி பழனிசாமி

Edappadi
, செவ்வாய், 15 நவம்பர் 2022 (11:41 IST)
17 வயது கால்பந்து வீராங்கனை பிரியா அறுவை சிகிச்சை செய்யப்படும் போது நடந்த தவறு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இதனை அடுத்து பிரியாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவரது சகோதரர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக விளையாட்டு வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
 
மேலும் ப்ரியாவின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்துக்கு காரணமான இந்த திமுக அரசை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 ஏற்கனவே பிரியாவின் கொடுப்பதற்கு இரண்டு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஸ் என்ட்ரி கொடுப்பேன்: உயிரிழந்த பிரியாவின் கடைசி சமூக வலைத்தள பதிவு!