தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஜப்பான் மற்றும் சிங்கப்பூருக்கு முதலீடுகளை ஈர்க்க சென்றுள்ள நிலையில் முதலமைச்சர் இரு நாடுகளுக்கும் சுற்றுலா சென்றுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொழில் அதிபர்களை சந்திக்கவும், தொழில் முதலீட்டை ஈர்க்கவும் ஜப்பான் மற்றும் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் முதலமைச்சரின் பயணம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கருத்து கூறிய போது தொழில் முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுலா சென்றுள்ளார் என்றும் அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களை திமுக அரசு தாங்கள் செய்ததாக கூறி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
புதிதாக எந்த ஒரு வெளிநாட்டு ஒப்பந்தமும் திமுக ஆட்சியில் கொண்டு வந்ததாக தெரியவில்லை என்றும் அவர் கூறினார். முதலமைச்சர் முக ஸ்டாலினின் வெளிநாடு பயணம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது