திராவிட கட்சிகளால் எந்த பயனும் இல்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதற்கு அப்புறம் ஏன் எங்களுடனும் திமுகவுடன் மாறி மாறி கூட்டணி வைத்தார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி அதிரடி கேள்வி எழுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி என்று அறிவித்தது.
அதன் பின்னர் தேர்தல் பிரச்சாரத்தில் திராவிட கட்சிகளால் எந்த பலனும் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறிய நிலையில் அப்புறம் எதற்காக எங்களிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார், எங்களால்தான் பயன் இல்லையே என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த நிலையில் ராஜ்நாத்சிங் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தபோது ஜெயலலிதா மீது நான் அதிக மதிப்பு மரியாதை என்று கூறிய உள்ளாரே, அது குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்டதற்கு எங்கள்தான் தலைவர்கள் மீது எதிரணியில் உள்ள கட்சியினர் கூட மரியாதை வைத்துள்ளது எங்களுக்கு பெருமை தானே என்று கூறினார்
அவர் ஜெயலலிதா குறித்து அவ்வாறு பேசியதால் அதிமுக வாக்கு கிடைக்கும் என்று எண்ணக்கூடாது, அதிமுக வாக்கு என்றைக்குமே அதிமுகவுக்கு தான் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.