Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆதரவற்றோருக்கு அவர்கள் இடத்திலேயே சுகாதாரமான உணவு – முதல்வர் அறிவிப்பு!

ஆதரவற்றோருக்கு அவர்கள் இடத்திலேயே சுகாதாரமான உணவு – முதல்வர் அறிவிப்பு!
, செவ்வாய், 24 மார்ச் 2020 (11:53 IST)
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்க அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

கொரோனா எச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மாவட்ட எல்லைகள் மூடப்பட இருக்கின்றன. இதனால் நேற்று முதலே மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு திரும்புவதால் கூட்டம் அலை மோதுகிறது. மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக பொருட்களை வாங்கி வருகின்றனர்.

மக்கள் வெளியேற கூடாது என்று அறிவித்துள்ள நிலையில் வீடற்ற, ஆதரவற்ற மக்களின் நிலை குறித்த கேள்வி எழுந்துள்ளது. தமிழக மக்களுக்கு நிவாரண பணிகளை அறிவித்துள்ள நிலையில் ஆதரவற்ற மக்களுக்கான ஏற்பாடுகளையும் அரசு செய்து வருகிறது.

மாவட்டங்கள் முழுவதும் பொது சமையற்கூடங்களை ஏற்படுத்தி அதன் மூலம் சூடான, சுகாதாரமான உணவை ஆதரவற்றோர்களுக்கு அவரவர் வாழும் இடங்களுக்கே சென்று வழங்க ஏற்பாடுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துரிதப்படுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடியின் முக்கிய உரை!