Publish Date: Sat, 29 Aug 2020 (09:12 IST)
Updated Date: Sat, 29 Aug 2020 (09:13 IST)
ஊரடங்கு குறித்து முடிவெடுக்க இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், தமிழகத்தில் பாதிப்பு உயர்ந்து வருவதாலும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. குறிப்பாக ஞாயிற்றுகிழமைகளில் முழு பொதுமுடக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாளை மறுநாள் ஊரடங்கு முடியும் நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளிக்காட்சி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.
இதனைத்தொடர்ந்து மருத்துவ குழுவினருடனும் மாலை 3 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். எனவே ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் ஊரடங்கு குறித்து தமிழக அரசு முடிவு செய்து நாளைக்குள் தெரிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.