Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Prasanth Karthick
திங்கள், 17 பிப்ரவரி 2025 (17:49 IST)

திருநெல்வேலியில் கல்லூரி மாணவர் எறும்பு கடித்ததில் பலியானதாக காவல்துறை கூறியுள்ளது விந்தையாக உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

 

திருநெல்வேலியில் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த விக்னேஷ் என்ற மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் காதில் ரத்தம் வடிந்ததாக பெற்றோர் புகார் அளித்துள்ள நிலையில், போலீஸார் எறும்பு கடித்திருக்கும் என அளித்த விளக்கம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

 

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி “திருநெல்வேலியில் கல்லூரி பயிலும் விக்னேஷ் என்ற மாணவர், கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து அவரது தாயார் காவல்துறையில் முறையிட்டு கழிவறையில் இருந்த அதிக அளவு இரத்தம் குறித்து கேட்க, "எறும்பு கடித்ததால் வந்திருக்கலாம்" என்று பொறுப்பற்ற முறையில் ஸ்டாலின் மாடல் திமுக அரசின் காவல்துறை தெரிவித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் காவல்துறை விசாரணை என்பதே விந்தையானதாக மாறிவிட்டது.

 

இசிஆர் வழக்கில் டோல் கேட்டில் விலக்கு பெற திமுக கொடி கட்டிய குற்றவாளி. இப்போது, எறும்பு கடித்து இவ்வளவு இரத்தம் சிந்தி, மர்மமாக உயிரிழந்த மாணவன் என இவர்கள் விசாரணை எல்லாம் சினிமாவில் வைத்தால் கூட யாரும் நம்ப முடியாத அளவில் தான் இருக்கிறது.

 

பட்டியலினத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரியான மாணவன் விக்னேஷின் மரணத்தின் உண்மையான காரணத்தை மறைத்து திசைதிருப்ப ஸ்டாலின் மாடல் திமுக அரசு முயற்சிக்குமாயின், அது கடும் கண்டனத்திற்குரியது.

 

மாணவன் விக்னேஷின் மரணத்திற்கான காரணத்தை முறையாக விசாரணை செய்து கண்டறிந்து, அதில் யாருக்கேனும் தொடர்பிருப்பின், கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த 5 நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்: வெய்யில் கொளுத்தும்: வானிலை எச்சரிக்கை!

கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் காலமானார்..!

இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை.. அமெரிக்காவில் பேசிய ராகுல் காந்தி..!

அம்மாவும் மகனும் சேர்ந்து அப்பாவை கொலை செய்த கொடூரம்.. அதிர்ச்சி காரணம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ரூ.50,000 சம்பளம் வாங்குபவர் ரூ.1,57,500 வாங்க வாய்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments