கொரோனா பாதிப்பினால் மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் இறக்க நேரிட்டால் அவர்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளுக்கு எதிராக மக்களை காப்பாதற்காக மருத்துவர்கள், காவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் போராடி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் கொரோனாவால் இறந்த மருத்துவரை அடக்க செய்ய பொதுமக்களே எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தால் நிவாரணமாக ரூ.50 லட்சம் வழங்கப்படும்.
இறந்தவரின் குடும்பத்திலிருந்து ஒருவருக்கு தகுதிக்கு ஏற்ப அரசு வேலை அளிக்கப்படும்.
மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்படும் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களுக்கு சிறப்பு விருதிகள் அளித்து அங்கீகரிக்கப்படுவார்கள் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.