Publish Date: Fri, 27 Jan 2023 (07:55 IST)
Updated Date: Fri, 27 Jan 2023 (07:56 IST)
அதிமுக தற்போது எடப்பாடி பழனிச்சாமி அணி மற்றும் ஓ பன்னீர் செல்வம் அணி என இரண்டு அணிகளாக பிரிந்து இருப்பதை அடுத்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டாலும் மாற்றுச்சின்னத்தில் போட்டியிட எடப்பாடி பழனிச்சாமி தயாராகி விட்டதாக தெரிகிறது. தற்போதைய டெக்னாலஜி உலகில் ஈரோடு கிழக்கு என்ற ஒரு சின்ன தொகுதியில் புதிய சின்னத்தை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதில் எந்தவித சிக்கலும் இருக்காது என்பதால் எந்த சின்னமாக இருந்தாலும் சரி அதில் போட்டியிட தயாராக இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதனை அடுத்து விறுவிறுப்பாக பிரச்சாரம் செய்யவும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.