Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.. விஜயகாந்துக்கு ஈபிஎஸ், கமல் வாழ்த்து..!

Advertiesment
vijayakanth

Siva

, ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2024 (11:31 IST)
மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது:

எடப்பாடி பழனிசாமி:

"இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே" என்ற கோட்பாட்டின் வழி வாழ்ந்த மனிதநேயப் பண்பாளர், தமிழ்த் திரையுலக வரலாற்றில் தனக்கென தனித்த இடத்தை கொண்டவர், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவர், மறைந்த அன்புச் சகோதரர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில், திரைவாழ்விலும் பொதுவாழ்விலும் அவர் நிகழ்த்திய சாதனைகளை நினைவுகூர்கிறேன்.

கமல்ஹாசன்:

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” எனும் வரிகளுக்கேற்ப வாழ்ந்தவர் எனது நண்பர், கேப்டன் விஜயகாந்த். ஈகையும் வீரமும் இதயத்தில் ஏந்திய நண்பரின் நினைவுகளை அவரது பிறந்த நாளில் போற்றுகிறேன்.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்ஸ்டாகிராமில் காதல்.. நேரில் சந்தித்தபோது ஏற்பட்ட விபரீதம்.. 2 பேர் கைது..!