சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது இஸ்லாமியர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பிரதமர் மோடி பேசியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் காட்டி வரும் நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை கூறியுள்ளார்.
அரசியல் கட்சி தலைவர்கள் மத துவேஷ கருத்துகளை தேர்தலுக்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் வாக்கு வங்கி அரசியலுக்காக சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இறையாண்மைக்கு உகந்ததல்ல என்றும் தெரிவித்துள்ளார்
இஸ்லாமியர் மனது புண்படும்படி இது போன்ற கருத்துக்களை தெரிவிப்பது ஏற்புடையதல்ல என்றும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், தலைவர்கள் இது போன்ற கருத்துக்களை தவிர்ப்பது மத நல்லிணக்கத்திற்கு நல்லது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
தலைவர்களின் சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மை இன மக்கள் மனதில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார் .அவரது இந்த அறிக்கையில் பிரதமர் மோடி என்ற வார்த்தை இல்லை என்றாலும் அவர் மோடிக்கு மறைமுகமாக அறிவுரை கூறியுள்ளதாக கருதப்படுகிறது