Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 2 April 2025
webdunia

மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள்: பொதுமக்கள் மீது முதல்வர் பழனிச்சாமி குற்றச்சாட்டு

Advertiesment
eps
, செவ்வாய், 20 நவம்பர் 2018 (10:42 IST)
கஜா புயல் சேதப்படுத்திய டெல்டா பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்ய வரும் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் முற்றுகையிட்டு வருகின்றனர். சில இடங்களில் தாக்குதலும் நடந்துள்ளது.

இந்த நிலையில் இன்று சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம், திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு ஹெலிகாப்டர் மூலமும் சென்று புயல் குறித்து ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களையும் எதிர்க்கட்சிகளையும் குறை கூறினார்.

கேரளாவில் உள்ள எதிர்க்கட்சிகளைப் போல தமிழக எதிர்க்கட்சிகள் செயல்படவில்லை என்றும், பொதுமக்களும் அப்படித்தான் இருக்கிறார்கள் என்றும், எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் மனசாட்சிப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் பழனிச்சாமி கூறினார்.

webdunia
மேலும் மீட்புப்பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருவதாகவும், புதுக்கோட்டை மாவட்டம், கஜா புயலால் பெரும் சேதம் அடைந்துள்ளதால் அனைவருக்கும் நிவாரணம் நிச்சயமாக வழங்கப்படும் என்றும் யாரும் விடுபட்டு போய்விடுவார்களா? என்ற சந்தேகம் தேவையில்லை என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலி என நினைத்து உல்லாச அழகியுடன் பழகிய வாலிபர்: 10 லட்சம் அபேஸ்