Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சியைக் கலைக்க திட்டமா ?... வருகிறது ரெய்டு – எடப்பாடியின் மாஸ்டர் பிளான் !

Webdunia
செவ்வாய், 4 ஜூன் 2019 (13:16 IST)
தமிழகத்தில் தனது ஆட்சியைக் கலைக்க திட்டம் நடந்துவருவதை உணர்ந்த எடப்பாடி பழனிச்சாமி வருமான வரித்துறையின் உதவியை நாடியுள்ளதாக செய்திகள் பரவிவருகின்றன.

மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் இமாலய வெற்றி பெற்றுள்ளது திமுகவுக்கு இருக்கும் ஆதரவைக் காட்டியுள்ளது. அதேபோல இடைத்தேர்தலிலும் திமுக 13 தொகுதிகளை வென்றுள்ளது. இதனால் திமுக ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது.

அதிமுகவுக்கு ஆதரவாக 123 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். ஆனால் கலைச்செல்வன், ரத்தினசபாபதி உள்ளிட்ட மூவரும் அதிமுக எதிர்ப்பு மனநிலையில் தான் உள்ளனர்.. மேலும் கருணாஸும் அதிமுக வுக்கு எதிரான மனநிலையில்தான் இருக்கிறார். அதனால் மொத்தமாக 119 பேர்தான் அதிமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை. இதனால் இன்னும் சில எம்.எல்.ஏக்களை அதிமுகவில் இருந்து இழுக்க திமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஈடுபட்டனர்.

இதற்காக திமுக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட சில நிர்வாகிகள் ரகசியமாக சில அதிமுக எம்.எல்.ஏக்களிடம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. அதற்காக பெரியத் தொகை ஒன்று திமுக தரப்பில் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள எடப்பாடி பழனிச்சாமி வருமான வரித்துறையின் உதவியை நாடியுள்ளதாக தெரிகிறது. தேர்தல் நேரத்தில் திமுக  வின் பணபுழக்கத்தைத் தடுக்க முன்பு ரெய்டுகளை நடத்தியது போல இப்போதும் ரெய்டுகள் நடத்தவேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிகிறது. அதனால் விரைவில் திமுக உறுப்பினர்கள் சிலர் வீடுகளில் விரைவில் ரெய்டு நடக்கலாம் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments