Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் சட்டத்தை மதிப்பதால் தூத்துகுடிக்கு செல்லவில்லை: எடப்பாடி பழனிச்சாமி

நான் சட்டத்தை மதிப்பதால் தூத்துகுடிக்கு செல்லவில்லை: எடப்பாடி பழனிச்சாமி
, வியாழன், 24 மே 2018 (13:54 IST)
தூத்துகுடியில் கடந்த மூன்று நாட்களாக 144 தடை உத்தரவு, பதட்டம், கலவரம், உயிரிழப்பு ஆகியவை ஏற்பட்டு பதட்ட நிலையில் உள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தூத்துகுடி மக்களுக்கு ஆறுதல் கூற பல்வேறு கட்சி தலைவர்கள் அங்கு நேரடியாக சென்றுள்ளனர்.
 
ஆனால் மக்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஏன் செல்லவில்லை என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
இந்த நிலையில் இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் ஒரு நிருபர் ' இதுவரையில் நீங்கள் தூத்துக்குடி மக்களை போய் சந்திக்காததற்கு காரணம் என்ன? என்று கேட்டதற்கு பதிலளித்த முதல்வர், 'தூத்துகுடியில் 144 தடை போடப்பட்டிருக்கு, நான் சட்டத்தை மதிப்பவன். அதனால் செல்லவில்லை என்று கூறினார், மேலும் ஒருசில கேள்விகளுக்கு பதிலளிக்காமல் முதல்வர் சென்றுவிட்டார்.
 
webdunia
முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது, 'எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சில இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அப்பாவி மக்களை தூண்டிவிட்டு இத்தகைய போராட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும், அமைதியாக நடைபெற்று வந்த போராட்டத்தில் வன்முறையை தூண்டியதாகவும், மக்களின் அமைதி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி அரசுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டதாகவும் முதல்வர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இத்தாலியில் ரயில் தடம் புரண்டு விபத்து - 2 பேர் பலி