Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எடப்பாடி பழனிச்சாமி விவசாயி அல்ல, விஷவாயு: ஸ்டாலின் விமர்சனம்

Advertiesment
எடப்பாடி பழனிச்சாமி விவசாயி அல்ல, விஷவாயு: ஸ்டாலின் விமர்சனம்
, வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (20:59 IST)
வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் கடந்த சில நாட்களாக சூறாவளி பிரச்சாரம் செய்து வாக்காளர்களை சந்தித்து வருகிறார். அவர் செல்லுமிடங்களில் எல்லாம் பெரும் வரவேற்பை பார்க்கும்போது திமுக கூட்டணிக்கு இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
 
இந்த நிலையில் முதல்வர் பழனிச்சாமி அடிக்கடி தனது தேர்தல் பிரச்சார உரையில் தான் ஒரு விவசாயி என்றும் ஒரு விவசாயியின் கஷ்டம் இன்னொரு விவசாயிக்குத்தான் தெரியும் என்றும் கூறி வருகிறார். இந்த நிலையில் முதல்வரின் இந்த பேச்சுக்கு இன்று மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
 
கள்ளக்குறிச்சி தொகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்த மு.க.ஸ்டாலின், 'முதல்வர் பழனிச்சாமி உண்மையான விவசாயி என்றால் நானே அவருக்கு ஆதரவு கொடுப்பேன். ஆனால் அவர் விவசாயி அல்ல, விஷவாயு என்று கூறினார். மேலும் ஏரி, குளம், கினறு, தென்னை மரத்தை அழித்தவர் தான் இந்த எடப்பாடி என்றும் அவர் கடும் விமர்சனம் செய்தார். 
 
webdunia
மேலும் ராகுல்காந்தி பிரதமர் ஆனவுடன், தமிழகத்தில் நடந்து வரும் ஆட்சி தூக்கி வீசப்படும் என்றும் கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளர் கவுதம சிகாமணியை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிடிவி தினகரனின் இலக்கு வெல்வதா? வீழ்த்துவதா?