தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு முன் ஒரு பெரிய ரெய்டுக்கு அமலாக்கத்துறை தயாராக இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன
தமிழகத்தில் மொத்தம் 50 இடங்களில் ரெய்டு நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் தயாராக இருப்பதாகவும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய துணை ராணுவ படையும் உஷார்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது
இதனை கேள்விப்பட்ட சில பிரபலங்கள் முன்னெச்சரிக்கையாக வெளிநாட்டுக்கு கிளம்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. அமலாக்க துறையின் சோதனையில் வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் சுற்றி வளைக்கப்படலாம் என்றும் அவரை பிரச்சாரத்துக்கு செல்ல விடாமல் முடக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
அதைப்போல் அதிமுகவின் முக்கிய பிரமுகர் ஒருவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் வேட்புமனு தாக்கல் முடிந்து பிரச்சாரம் தீவிரமாக ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அமலாக்கத்துறை சோதனை ஏற்பட்டால் தேர்தல் நேரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.