Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2வது நாளாக ஜாபர் சாதிக் சகோதரர் ஆஜர்.. அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை..!

2வது நாளாக ஜாபர் சாதிக் சகோதரர் ஆஜர்.. அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை..!

Siva

, புதன், 22 மே 2024 (14:40 IST)
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரர் சலீம், 2வது நாளாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனதாகவும், அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததாகவும் தகவல் வெளியானது.
 
 ஜாபர் சாதிக்கின் சகோதரர் சலீம் தனது வழக்கறிஞரோடு நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சலீம் இன்று ஆஜரானார். ஏற்கனவே நேற்று 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ஆஜராகியுள்ள நிலையில் இன்றும் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
 
வங்கி பரிவர்த்தனை உள்ளிட்ட ஆவணங்களோடு ஆஜரான சலீமிடம் அமலாக்கத்துறை  அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும், விசாரணைக்கு பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகின்றன.
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்  ஜாபர் சாதிக் மனைவி ஹமீனா என்பவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக ஆட்சியில் ரூ.6,000 கோடி நிலக்கரி ஊழல்.? பிரபல நாளிதழில் அதிர்ச்சி ரிப்போர்ட்.!!