Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி..! குற்றாலத்தில் அபாய எச்சரிக்கை ஒலிப்பான்கள் பொருத்தும்.!

Senthil Velan
புதன், 29 மே 2024 (17:19 IST)
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவி பகுதியில் வெள்ளப்பெருக்கால் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்க, அதிக ஒலி எழுப்பக்கூடிய அபாய எச்சரிக்கை ஒலிப்பான்கள் பொருத்தும் பணிகள்  நடைபெற்று வருகிறது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர், பழைய குற்றாலம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாகவும், மேலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு வருகிறது.
 
அந்த வகையில், குற்றாலம் மெயின் அருவியில் திடீரென ஏற்படும் வெள்ளப்பெருக்கை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில், எச்சரிக்கை ஒலிப்பான்கள் பொருத்தும் பணி  நடைபெற்று வருகிறது. மெயின் அருவியில் அருவிக்கரை பகுதியில் ஏற்கனவே அபாய சைரன் பொருத்தப்பட்டுள்ளது.

ALSO READ: பாலியல் வழக்கு.! முன்ஜாமீன் கேட்டு பிரஜ்வல் ரேவண்ணா மனு..!
 
கூடுதலாக பெண்கள் உடை மாற்றும் பகுதி, வழிப்பாதை உள்ளிட்ட இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் அதிக ஒலி எழுப்பும் எச்சரிக்கை ஒலிப்பான்கள் பொருத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்