Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேட்புமனுக்களை பெற வேண்டாம்: தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 6 டிசம்பர் 2019 (07:47 IST)
உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுமென கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்த தேர்தல் ஆணையம் டிசம்பர் 6 முதல் அதாவது இன்று முதல் வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம் என அறிவித்து இருந்தது
 
ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் திமுக தாக்கல் செய்த மனுவின் காரணமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10 மணிக்கு வெளி வருவதை அடுத்தே இந்த தீர்ப்புக்கு பின்னர் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் காத்திருக்கின்றனர் 
 
இந்த நிலையில் சற்று முன்னர் தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது என அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில், மறு உத்தரவு வரும் வரை வேட்புமனுக்களை பெற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இந்த உத்தரவின்படி வேட்புமனுத்தாக்கல் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பின்னரே வேட்புமனு தாக்கல்  ஏற்கப்படும் என்பது உறுதியாகிறது. எனவே இன்று காலை வெளிவரவிருக்கும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தமிழக மக்கள் மட்டுமன்றி அனைத்து அரசியல்வாதி அரிய காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக உண்மையிலேயே தமிழ் விரோத கட்சி: அமித்ஷாவின் ஆவேச பேட்டி..!

நேற்று 11 மாவட்டங்களில் சதமடித்த வெயில்.. இன்றும் வெப்பம் அதிகம் இருக்கும் என தகவல்..!

மகிழ்ச்சி நிலைக்கட்டும்: தெலுங்கு, கன்னட சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்து சொன்ன விஜய்..

பாஜகவுடன் கூட்டணி வைத்து கொள்ள ஒரு நிபந்தனை மட்டும் விதியுங்கள்.. ஈபிஎஸ்-க்கு தங்கம் தென்னரசு அறிவுரை

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ஈபிஎஸ் கதை முடிந்துவிடும்: திருமாவளவன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments