தமிழகத்தில் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த நவம்பர் மாதம் தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் கோடிக்கணக்கான மக்கள் ஏற்கனவே மின் எண் மற்றும் ஆதார் எண்ணை இணைத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிப்ரவரி 15ஆம் தேதி தான் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கடைசி தேதி என தமிழக அரசின் மின்சார துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தை அடுத்து அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஆதார் அட்டை இல்லாதவர்கள் புதுச்சேரி அரசு துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்துடன் மின் இணைப்பை இணைக்க வேண்டும் என்று புதுவை அரசு அறிவித்துள்ளது.