சய்லெண்ட்டா ஒதுங்கி இருக்கனும், தப்பு பண்ணிட்டேன்: இளங்கோவனை புலம்ப விட்ட திமுக!

Webdunia
செவ்வாய், 26 நவம்பர் 2019 (13:24 IST)
ஈரோடு தொகுதி ஒதுக்கப்படாதது தெரிந்ததும் நான் போட்டியிடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும் என இளங்கோவன் வருத்தம் தெரிவித்துள்ளார். 
 
பாஜக அரசின் பொருளாதார மந்த நிலையை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் இளங்கோவனும் கலந்துக்கொண்டார். 
 
அப்போது அவர் மேடையில் பின்வருமாறு பேசினார், பொருளாதார மந்த நிலைக்கு மத்திய அரசின் தவறான நடவடிக்கையே காரணம். தேனி தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும், துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகனுமான ரவீந்தரநாத் வெற்றி பெற்றார். 
 
ஒரு ஒட்டுக்கு ரூ.2,000 கொடுத்து ரூ.200 கோடி வரை செலவு செய்து வெற்றி பெற்றார். மேலும், எனது சொந்த ஊரான ஈரோட்டில் சீட் கிடைக்காததால்  தேனியில் போட்டியிட்டேன். நான் சொந்த ஊரில் சீட் கிடைக்காததும் அமைதியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தேனிக்கு சென்று தவறு செய்துவிட்டேன் என பேசினார். 
 
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியை மதிமுகவுக்கு திமுக ஒதுக்கியதால் தேனியில் இளங்கோவன் போட்டியிட்டு தோல்வி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments