பேருந்துகளில் விரைவில் Gpay மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் சிவசங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்
வளர்ந்துவரும் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ப பேருந்துகளிலும் அதனை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது
இந்த நிலையில் பேருந்துகளில் பயண அட்டைகளுக்கு பதிலாக இ-டிக்கெட் வழங்கும் முறை இந்த ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்
Gpay மூலம் டிக்கெட் பெறுவதற்காக பயணிகள் தங்கள் மொபைல் போனிலிருந்து மூலம் கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம் என்றும் நேரடி பணப் பரிமாற்றத்தை இதன் மூலம் தவிர்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்
இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னையில் இ-டிக்கெட் அறிமுகம் செய்யப்படும் என்றும் அதன்பிறகு படிப்படியாக தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து பேருந்துகளிலும் இ-டிக்கெட் அறிமுகம் செய்யப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது