சுய தொழிலால் கெட்ட இ-பதிவு இணையதளம்?

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (10:01 IST)
மின் ஆளுமைத்துறை அதிகாரிகள் தற்போது இ-பதிவு இணையதளத்தை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என தகவல். 

 
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இ-பதிவு முறையிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி சுயதொழில் செய்வோர் கடைகளை திறக்கவும், வெளி இடங்களுக்கு வேலைக்கு செல்லவும் இ-பதிவில் பதிவு செய்துகொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எலக்ட்ரீசியன், ப்ளம்பர், கணினி பழுது பார்ப்பவர்கள், மோட்டார் வாகனம் பழுது பார்ப்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் உள்ளிட்டோர் இ-பதிவு செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இ-பாஸ் பெற ஒரே சமயத்தில் பலர் விண்ணப்பிக்க முயற்சித்ததால் இ-பதிவு இணையதளம் முடங்கியுள்ளது. எனவே, மின் ஆளுமைத்துறை அதிகாரிகள் தற்போது இணையதளத்தை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சுயதொழில் செய்வோர் அதிகளவில் இ-பதிவு செய்ய முயன்றதால் அந்த இணையதளம் முடங்கியதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

விஜய்யை பார்க்க முண்டியடித்த தவெக தொண்டர்கள்.. காவல்துறை தடியடியால் பரபரப்பு..!

2026 தேர்தலில் தி.மு.க. துடைத்தெறியப்படும்: முதல்வர் ஸ்டாலினுக்கு அமித் ஷா சவால்!

விதிமுறைகளை மீறி தவெக தொண்டர்கள் செய்த அட்டகாசம்.. விரட்டிப் பிடிக்கும் காவலர்கள்

புதின் இந்திய வருகையால் டிரம்ப் ஆத்திரம்.. இந்திய அரிசுக்கு வரி விதிக்க திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments