Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (09:59 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் டெல்லியிலும் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக மெட்ரோ ரயில் இன்று முதல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
டெல்லியில் மெட்ரோ ரயில் 50% பயணிகளுடன் இன்று முதல் இயங்கும் என்றும் பயணிகள் பாதுகாப்புடன் பயணம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுப்பதற்கு பெரும்பாலும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தலாம் என்றும் ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்தால் கொரோனா வைரஸ் பாதிப்பை பெருமளவு தடுக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
50 சதவீத இருக்கைகளுடன் தற்போது மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருவதாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து இருக்கவேண்டும் என்றும் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் விதிகளை கடைபிடிக்காதவர்கள் பயணம் செய்ய அனுமதிக்க மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments