இன்று ஓய்வுபெறும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு!
கொரொனா வைரஸ் தமிழகத்தில் மிக தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசும், அமைச்சர்களும் இரவுபகல் பாராது பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் பங்கு மகத்தானது.
இந்த நிலையில் இன்றுடன் ஓய்வு பெற இருந்த அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பணி நீடிப்பு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்
இன்றுடன் ஓய்வு பெறுபவர்கள் ஒப்பந்த முறையில் மேலும் இரண்டு மாதங்களுக்கு தற்காலிக நியமனம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் சேவையை இந்த நேரத்தில் தேவைப்படுவதால் இந்த நடவடிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
முதல்வரின் இந்த முடிவுக்கு இன்று அதாவது மார்ச் 31ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். பொதுநலன் கருதி தமிழக முதல்வர் முதலமைச்சர் எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது