Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துரைமுருகன் மகனின் வேட்பு மனு ஏற்பு ! திமுகவினர் மகிழ்ச்சி ...

Webdunia
வெள்ளி, 19 ஜூலை 2019 (14:09 IST)
அதிமுக சார்பில் வேலூர் மக்களவைத் தொகுதியில்போட்டியிடும் ஏ சி சண்முகத்தின் வேட்புமனு பரிசீலனையின் போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் துரைமுருகன் மகனின் வேட்பு மனு தாக்கல் சிறுது நேரம் நிறுத்திவைக்கப்பட்ட கதிர் ஆனந்தின் மனு ஏற்கப்பட்டுள்ளது. இதனால் வேலூர் தொகுதில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
வேலூர் தொகுதிக்கு மட்டும் ரத்து செய்யப்பட்ட மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி மீண்டும் நடக்க இருக்கிறது. இதில் திமுக சார்பில் கதிர் ஆனந்தும் அதிமுக சார்பில் ஏ சி சண்முகமும் மீண்டும் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடுகிறார் தீபலஷ்மி. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றோடு முடிந்தது.
 
இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேட்புமனுக்களுக்கான பரிசீலனைகள் நடந்தன. அப்போது அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரான புதிய நீதிக் கட்சியின் தலைவரான ஏ சி சண்முகத்தின் வேட்புமனுவின் மீது யாருக்காவது ஆட்சேபணை இருக்கிறதா என்ற கேள்விக்கு திமுகவினர் சிலர் ‘வேட்பாளர் ஏ.சி. சண்முகம் புதிய நீதிக் கட்சியின் தலைவர். அவர் அதிமுக என்ற கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். 
 
அப்படியெனில் அவர் அதிமுக என்ற கட்சியின் உறுப்பினராகியிருக்கிறாரா?  அப்படி இருந்தால் அது வேட்புமனுவில் இணைக்கப்பட்டுள்ளதா ?’ எனக் கேள்வி எழுப்பினர். இதனால் அவரது வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுகவினர் இதற்கெதிராக கூச்சல் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்நிலையில் சற்று முன்வரை வேலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தின் மீது, பணப்பட்டுவாடா சம்பந்தமாக புகார் இருப்பதாக ஒரு சுயேட்சை வெட்பாளர் ஆட்சேபம் தெரிவித்தார். இதனையடுத்து சிறுது நேரம் அவரது வேட்பு மனுவை அதிகாரி நிறுத்தி வைத்தார்.
 
இந்நிலையில் தற்போது, கதிர் ஆனந்தின் வேட்பு மனு தாக்கல் ஏற்கட்டுள்ளதால் திமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வேலூர் தொகுதியில் மும்முனை போட்டி நிலவுவதால் வெற்றி யாருக்கு என்பதில் பரப்பரப்பு நிலவுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments