திமுக வேட்பாளர் பட்டியலில் இந்த முறை துரைமுருகனின் அதிகாரம் இருக்காது என சொல்லப்படுகிறது.
திமுகவின் பொதுச்செயலாளராக இருக்கும் துரைமுருகன் கடந்த ஓராண்டாக இருந்து வருகிறார். திமுகவில் தலைவருக்கு அடுத்தபடியாக அதிக அதிகாரம் கொண்ட பதவி என்றால் அது பொதுச்செயலாளர்தான். ஆனால் துரைமுருகன் பொதுச்செயலாளர் ஆவதற்கு முன்பாகவே திமுகவில் கலைஞருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். வேட்பாளர் பட்டியலில் கூட கலைஞர் துரைமுருகனை ஆலோசிப்பது உண்டு என்பது திமுகவினருக்கு தெரியும். அதனால் பலரும் துரைமுருகனிடம் பரிந்துரைக்கு சென்று நிற்பர்.
ஆனால் இந்த முறை துரைமுருகன் வேட்பாளர் பட்டியலுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளாராம். முழுக்க முழுக்க ஸ்டாலின் மற்றும் ஐபேக் குழுவினரே முடிவு எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இறுதிக் கட்டம் வரை யார் வேட்பாளர் என்பது தெரியாத நிலையே உள்ளதாம்.