Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதிக்கு வழங்கப்பட்ட பதவி குறித்து துரைமுருகன்!

Webdunia
வியாழன், 4 ஜூலை 2019 (15:56 IST)
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி என திமுக அதிகாரபூர்வமாக சற்றுமுன் அறிவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் உதயநிதிக்கு வழங்கப்பட்ட பதவி குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
 
உதயநிதிக்கு பொறுப்பு வழங்கப்பட்டது எனக்கு மட்டுமல்ல கட்சியில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி என்றும், உதயநிதி திரைப்பட நடிகர் என்பதால் அவருக்கென்று தனி செல்வாக்கு உள்ளதாகவும் அது கட்சிக்கு பெரும் பயன் அளிக்கும் என்றும் துரைமுருகன் தெரிவித்தார்.
 
மேலும் தந்தையை போலவே இளைய தலைமுறையினரை உதயநிதி ஈர்ப்பார் என்றும்,  ஸ்டாலினின் மகன் என்கிற செல்வாக்கை தாண்டி உதயநிதி ஆற்றல்மிக்கவர் என்று கூறிய துரைமுருகன், உதயநிதியின் தேர்தல் பிரசாரங்களை பார்த்து நானே வியந்து போனேன் என்றும், * சொல்ல வேண்டிய கருத்தை கேட்பவர்கள் இதயத்தில் பதியும்படி உதயநிதி பேசுவார் என்றும் உதயநிதிக்கு அவர் புகழாரம் சூட்டினார்.
 
அதேபோல் "உதயநிதி ஸ்டாலின் நியமனத்தை வாரிசு அரசியல் என சொல்லமுடியாது என்று கூறிய திமுக பிரமுகர் ஜெ.அன்பழகன், 'அனைத்து இடங்களிலும் வாரிசுகள் இருப்பதாகவும் திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தவே உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments