கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட துரைமுருகன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் சமீபத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் வீட்டிலேயே தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுவந்தார். மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்த நிலையில் இன்று துரைமுருகன் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.